Home அறிவியல் அறிவோம் ஆயிரக்கணக்கில் முட்டையிடும் அவரை வெள்ளையன்… இலைகளைத் தேர்வு செய்வது எப்படி?

ஆயிரக்கணக்கில் முட்டையிடும் அவரை வெள்ளையன்… இலைகளைத் தேர்வு செய்வது எப்படி?

0
ஆயிரக்கணக்கில் முட்டையிடும் அவரை வெள்ளையன்… இலைகளைத் தேர்வு செய்வது எப்படி?

அவரை வெள்ளையன் (Mottled Emigrant) பூச்சிகளின் இறக்கைகள் சாம்பல் கலந்த வெள்ளை அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

ஆண் வண்ணத்துப்பூச்சியின் முன் இறக்கைகளின் மேல்புற நுனியில் ஒரு சிறிய கருந்திட்டும் கருப்பு விளிம்பும் இருக்கும். இறக்கையின் கீழ்புறத்தில் திட்டுகள் கிடையாது.

பெண் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் ஆண் பூச்சிகளின் இறக்கையைப் போலவே இருக்கும். ஆனால் கருந்திட்டு பெரியதாகவும் கருப்பு விளிம்பு அகலமாகவும் காணப்படும்.

Image credit-Joydeep and wikimedia commons- Mottled Emigrant

மேலும் இறக்கைகளின் கீழ்புறத்தில் பழுப்புநிற மெல்லிய கீற்றுகள் காணப்படும்.

நடவடிக்கைகள்

சுறுசுறுப்பாக ஒழுங்கின்றி தரையை ஒட்டியும் மேலாகவும் பறக்கும். பரவலாக வருடம் முழுதும் காணப்படும். பெருங்கூட்டமாக வலசை போகும். வழக்கம் போல் ஆண் பூச்சிகள் கோடை காலஙகளில் ஈர மண்ணில் தாது உப்பை உறிஞ்சும்.

அதிசய நிகழ்வுகள்

பெண் வண்ணத்துப்பூச்சிகள் இதன் முட்டையிடும் காலத்தைத் தேர்வு செய்து, தனது முட்டையிலிருந்து புழுக்கள் வெளியே வந்தவுடன் அது உண்பதற்கு ஏற்ற தாவரங்களைத் தேர்வு செய்து முட்டைகளை இடுகின்றன. அதுவும் நன்கு செழித்து வளர்ந்த புதர்ச்செடியின் நடுப்பாகத்தில், உயரமாக இருக்கும் கிளையிலிருக்கும் கொழுந்து இலையின் உட்பகுதிகளையே தேர்வு செய்கின்றன. அவ்வாறு தேர்வு செய்ய அதன் கால் பகுதிகளில் உள்ள முட்களின் மூலம் நுண்ணிய துளையிட்டு அந்த இலையின் தகுதியை சோதனை செய்கின்றன. பின்னர், மற்ற பெண் வண்ணத்துப் பூச்சிகளையம் ஈர்த்து நூற்றுக்கணக்கில் ஒன்றினைந்து ஆயிரக்கணக்கான முட்டைகளை ஒரே செடியில் இடுகின்றன. இதன்மூலம் இவற்றின் இனப்பெருக்கம் வேட்டையாடிப் பூச்சிகளிடமிருந்து ஓரளவு காக்கப்படுகிறது. முட்டையிலிருந்து நான்கு நாட்களில் வெளிவரும் புழுக்கள் அதன் ஆரம்பக்கால உணவாக அந்த இலைகளைச் சாப்பிட்டு வளரகின்றன.

Image credit-Baluperoth+ME eggs

நன்கு வளர்ந்த புழுக்கள் தங்களது கூட்டுப்புழு (Pupa) பருவத்தை அந்தத் தாவரத்திலேயே கழிப்பதில்லை. அதற்குக் காரணம் உணவாகிப் போன அந்தத் தாவரத்தில் இலைகள் குறைந்து வெறும் குச்சிகளாக காட்சியளிப்பதால் பாதுகாப்பு கருதி, பக்கத்தில் உள்ள வேறு செடிகளில் ஏறி கூட்டுப்புழுவாகித் தொங்குகின்றன. அவ்வாறு தொங்கும் காலம் பத்து நாட்களுக்குள் இருக்கலாம். பின்னர் கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்சிகள் தனது அடுத்த சுழற்சியைத் தொடங்குகின்றன.

அவ்வாறு சுழற்சிகள் முடிவதற்குள் எண்ணற்ற மலர்கள் மற்றும் தானியங்கள் உருவாக ஏதுவான அயல்மகரந்தச் சேர்க்கையை நடத்திச் செல்கின்றன.

அவரை வெள்ளையன் வண்ணத்துப்பூச்சிகள் அதன் புழுக்களுக்கு உணவாக சரக்கொன்றை, ஆவாரை, பேய் அவரை போன்ற செடிகளையே தேர்வு செய்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here