நீநிகா, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பாதுகாப்பு குறித்த செய்திகளுக்கான தளம். நாங்கள் தமிழ் மொழியில், சூழலியல் சார்ந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடுகிறோம். சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும், ‘இயற்கையின் ஊடகமான’ நீநிகா, சுற்றுச்சூழல், காடு, காட்டுயிர், கடல் சூழலியல், வேளாண்மை ஆகியவை தொடர்பான செய்திகளை உருவாக்குகிறது.
நீர், நிலம், காற்று ஆகியவையே இந்தப் பூமியின் இயக்கத்திற்கான, இப்பூமியில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை. அவற்றையே அடிப்படையாகக் கொண்டு, அறிவியல்ரீதியிலான அணுகுமுறையோடு, நேர்மையாக, சார்புநிலையின்றி, சமூக-சூழலியல் அமைப்பில் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்குவதற்காக தனித்துவமான கட்டுரைகளையும் செய்திகளையும் உருவாக்குவதற்கு அயராமல் உழைப்பதே ‘நீநிகா’வின் நோக்கம். நம்மிடையே நிலவும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பிரச்னைகளைப் பற்றி, கழுகுப் பார்வையோடு, இயற்கையின் தரப்பிலிருந்து முழுமையாகத் தருவதற்கு எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறோம்.
சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து சுவாரஸ்யமான தகவல்களையும் மக்களுக்கு வழங்குவதே எங்கள் பணி. நாங்கள் முழுமையான ஈடுபாட்டோடு, இயற்கையின் ஆற்றல்மிக்க குரலாய் ஒலிப்பதற்காக, உங்கள் ஆதரவோடு பாடுபடுவோம்.
ஒரு நீண்ட, அவசியமான பயணத்தின் தொடக்கத்தில் நீநிகா நின்றுகொண்டிருக்கிறது. சமூக, சூழலியல் நீதியை மையத்தில் நிறுத்தி, உள்ளூர் மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த முதன்மையான ஊடகமாகும் அந்தப் பயணத்தில், எங்களோடு நீங்களும் இணையவேண்டும் என்று அளவற்ற அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.